Advertisements

மட்டு போதனா வைத்தியசாலை குழுவின் உப தலைவராக மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் றமழான் தெரிவு

மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் உபதலைவராக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

அமைச்சர்கள், மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பெயரில் கௌரவ சுகாதார அமைச்சரினால் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் புதிய மூன்று ஆண்டுகளுக்கான அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பல்கலைக்கலக மாணவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், வர்த்தகர்கள்,முன்னால் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பிரத்தியோக செயலாளர்கள் என சுமார் 85க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கான முதலாவது கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் இன்று சனிக்கிழமை அதாவது 15 11 2014ம் திகதி மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் கேட்ப்போர் கூடத்தில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எப்.இப்றாலெவ்வை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தற்போது எதிர் நோக்கியுள்ள இடப்பற்றாக்குறை மற்றும் அடிப்படைத்தேவைகள் எதிர்காலத்தில் பூர்த்தியாக்கப்படவுள்ள கட்டிடங்கள் புதிதாக எதிர்காலத்தில் அமைக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் பற்றிய விபரங்களை புதிய அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சிறப்பாக இயக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்

அதனைத் தொடர்ந்து புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது புதியஅபிவிருத்திக் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திரு ராஜன் மயில்வாகனம் அவர்களும் உப தலைவராக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் அவர்களும்செயலாளராக வைத்தியசாலையின் செயலாளர் ரி.குகராஐh அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் பதினைந்து பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது இக்கூட்டத்திற்கு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்களானவைத்தியர் திருமதி எல்.எம். நவரட்ணராஜா,வைத்தியர் திருமதகே.கனேசலிங்கம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர் 20141115_112353 20141115_112337

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: