Advertisements

தவறிலிருந்து விடுபட்டு வாழ்வதுதான் மனிதனின் சிறந்த பன்பாகும்- அபிவிருத்தி உத்தியோகத்தர் றசூல்ஸா

தவறு செய்வது பொதுவாக மனித இயல்பாகும்.ஆனால் செய்த தவறிலிருந்து விடுபட்டு வாழ்வதுதான் மனிதனின் சிறந்த பன்பாகுமென சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றசூல்ஸா தெரிவித்தார்.

சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனையளிக்கப்பட்டு சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அன்மித்த பகுதிகளைச் சேர்ந்த தவறாளர்களுக்கான ஆண் மீக செயலமர்வு (13.11.2014)வியாழக்கிழமை காத்தான்குடி மஸ்ஜிதுல் உமர் சரீப் மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றசூல்ஸா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தவறு என்பது இயல்பாகவே நடந்து விடுகின்றன. ஆனால் செய்த தவறை விட்டும் விலகி அதிலிருந்து திருந்தி வாழ்வது சிறந்த மனிதப்பன்பாகும்.

சிறந்த மனிதனாக வாழ்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் இதை நாங்கள் பார்க்க வேண்டும்.

தவறுகளில் இருந்து திருந்தி வீட்டிலும், குடும்பத்திலும், சமூக சூழைலிலும் எதிர் காலத்தில் செல்வாக்குள்ள மனிதர்களாக வாழ வேண்டும்.

சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனையளிக்கப்பட்டு சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் இவ்வாறான ஆண்மீன ரீதியிலான செயலமர்வுகளை நடாத்தி அவர்களின் மனோ நிலையில் ஆன்மீக சிந்தனை ஏற்படவும் அதன் மூலம் சிறந்த மனிதனாக வாழ்வதற்குரிய வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையாக இதனை நாங்கள் நடாத்துகின்றோம் என தெரிவித்தார்.

இந்த செயலமர்வில் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர் எஸ்.தயானந்தன் உட்பட உலமாக்களும் இதில் கலந்து கொண்டனர்.;

இந்த செயலமர்வில் சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனையளிக்கப்பட்டு சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களினால் கண்கானிக்கப்பட்டு வரும் பத்து பேர் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_2511 SAM_2510 SAM_2507

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: