Advertisements

மாணவர்களின் சத்துணவை திருடிய அதிபர் – வவுனியாவில் சம்பவம்

School Foodவவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உலக உணவுத் திட்ட உணவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக வடமாகாண பிராந்திய உலக உணவுத்திட்டத்தின் அதிகாரி க.றொய்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 20ஆம் திகதி வடமாகாண பிராந்திய உலக உணவுத் திட்டத்திற்கு கிடைத்த தொலைபேசி முறைபாட்டுக்கு அமைவாக உலக உணவுத் திட்ட அதிகாரிகளும், வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து 21ஆம் திகதி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சத்துணவுகள் உரிய அளவில் வழங்கப்படாமல் பொருள்கள் பாடசாலைக்கு வெளியில் வாகனத்தில ஏற்றிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதேவேளை இப்பாடசாலையில் முன்னர் பணியாற்றிய அதிபர் தற்போது பணியாற்றும் அதிபரிடம் வழங்கிய கையிருப்புக்கும் பதிவேட்டிற்கும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலக உணவுத் திட்டத்தின் அதிகாரிகள் வுவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜாவிடம் 21ஆம் திகதியே முறையிட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறிப்பிட்ட அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன்சோமராஜா, வட மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினரும் வட மாகாண கல்வி அமைச்சின் வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பின உறுப்பினருமான இ.இந்திரராஜாவிற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளரிம் கேட்ட போது, உலக உணவுத்திட்ட அதிகாரிகளால் வவுனியா அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பிரதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, உலக உணவுத் திட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்ட பூந்தோட்டம் பாடசாலையின் முன்னாள் அதிபர் தற்போது வவுனியாவின் பிரபல பாடசாலையொன்றிற்கு அதிபராக மாற்றலாகி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

JVP

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: