Advertisements

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்- அமைச்சர் பசீர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒட்டு மொத்த தீர்மானத்திற்கு அமைவாகவே நான் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உங்களின் ஆதரவு யாருக்கு என அவரிடம் கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என இன்னும் தீர்மானம் எடுக்க வில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடம் கூடி இதற்கான முடிவை எடுக்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒட்டு மொத்த முடிவுக்கு இசைவாகவே நான் முடிவெடுப்பேன்.

ஆனால் என்னுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நான் கட்சியின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டத்தில் முன் வைப்பேன்.

அந்த கருத்துக்களுக்கு உடன் பட்ட வகையிலே முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடத்தில் இருக்கின்ற உறுப்பினர்களையும் எனது கருத்தின் பால் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை அரசியல் அதியுயர் பீட கூட்டங்களிலே நான் செய்வேன்.

கடந்த காலங்களிலும் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இருந்த காலத்திலிருந்து அதியுயர் பீடக் கூட்டங்களில் நான் கருத்துக்களை தெரிவித்து அதன் பால் பெரும் பான்மையானவர்களை ஈர்த்த அனுபவம் எனக்கு இருக்கின்றது.

எதிர் வரும் இந்தக் காலகட்டங்களிலும் எதிர் வரும் தேர்தல் வியூகங்கள் எப்படி அமைய வேண்டுமென்றும் அந்த வியூகங்கள் எப்படியமைந்தால் முஸ்லிம்களுக்கு நன்மையானது என்பன போன்ற கருத்துக்களை கூறி பெரும்பாலான உறுப்பினர்களை ஈர்;க்க முடியும்.

அவ்வாறு ஈர்க்க முடியாவிட்டால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானம் பிழையாக இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவாக உடன் பட்டு செயல்படுவேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் எனது ஆலோசனையை நான் கட்சியின் அரசியல் அதியுயர் பீடத்தில் தெரிவித்தேன் ஆனால் எனது ஆலோசனை அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.தீர்மானமாக எடுக்கப்படவில்லை. எனினும் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக கட்சிக்கு கட்டுப்பட்டு செயல் பட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisements

Comments

  1. momedrislan says:

    Ithellam oru poochchandi. Katchikku kattuppadavittal vilahavendiyathuthan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: