Advertisements

அரசியல் வாதிகளால் வளர்க்கப்படும் மார்க்க விரோதக் கொள்கைகள்: வரலாறு  நமக்கு சொல்லும் பாடமென்ன?

-பைசர்அமான்-

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான ஷீஆ கொள்கை எமதூரில் பரவிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு இப்போது பல்வேறு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையிலேயே தேசிய தௌஹீத் அமைப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று பகிரங்கப்பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஷீஆ கொள்கை என்றால் என்ன..? அதன் பாரதூரம் என்ன..? போன்ற விடயங்களை சாதாரணமக்கள் புரிந்து கொள்வதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இது போன்ற பிரச்சாரங்கள் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான சிந்தனைகள் எதுவாக இருந்தாலும்.. அதனைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் ஈமானுள்ள அனைவரும் அதனைக் கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் முயற்ச்சிக்கவே வேண்டும்.

தூய இஸ்லாத்தின் மீது நாம் கொண்டுள்ள பற்றின் பிரதிபலிப்பே அதுவாகும். அவ்வாறு இஸ்லாத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நாம் அதனைப் பாதுகாப்பதற்கு முயலும்போது நீதமாகவும் இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை மீறாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.

‘ஒருவர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவர்மீது நீதி செலுத்துவதிலிருந்துதவறிவிடவேண்டாம்.’ என்ற நபியவர்களின் பொன்மொழி இங்கு நினைவுபடுத்த பொருத்தமானது.

மேலும், வெறும் அனுமானங்கள், ஊகங்கள் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டுவதும் பாரதூரமான விடயமாகும். அதுவும் ‘ இவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கைகளை பரப்புகிறார்கள்..அதற்கு துணை போகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டினை தெளிவான ஆதாரங்கள் எதுவுமின்றி இவ்வாறு  சுமத்துவதானது இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

ஏன் இதனைச் சொல்வேண்டியிருக்கிறது என்றால்…ஷீஆ விடயம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை சாதகமாகப் பயன்படுத்தி தமது அரசியல் வஞ்சத்தை  தீர்த்துக் கொள்ளும்  அற்ப அரசியல் நோக்கத்தோடு  சிலர்தொழிற்படுவது தெளிவாகவே தெரிகிறது.

குறிப்பாக, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை(PMGG) இலக்கு வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்களை சிலர் மறை முகமாகவும், வெளிப்படையாகவும் முன்வைத்து பிரச்சாரம் செய்வதனை காணக்கூடியதாக இருக்கிறது.

இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான கொள்கையானது அரசியல் பின்புலத்துடன் வளர்க்கப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்என்பதுஉண்மையே.ஆனாலும் நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களின் நியாயத் தன்மையினை நமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டியது மிக முக்கியமாகும்.

அவ்வாறு மதிப்பீடு செய்தால்,

தமது அரசியல் இலாபங்களுக்காக மார்க்க விரோத கொள்கைகளை  நமதூரில் வளர்த்துப் பலப்படுத்தியது PMGGயா அல்லது ஏனைய அரசியல்தரப்புகளா..? என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

வரலாறுகற்றுத்தரும்பாடம்என்ன..?

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கோட்டபாடுகளுக்கு எதிரான அத்வைதக் கொள்கை எமதூரில் 1977 ஆம் ஆண்டிலிருந்தே பலமான நிர்வாக கட்டமைப்புக்களுடன் பகிரங்கமாகவே பரப்பப்பட்டு வந்திருக்கின்றது. வரலாறு நெடுகிலும் பல்வேறு அரசியல் வாதிகள் தமது அற்ப அரசியல் இலாபங்களுக்காக வெவ்வேறு கால கட்டங்களில் அத்வைதக் கொள்கையினை வளர்ப்பதற்கு துணைபோயிருக்கின்றார்கள்.

கடந்த 2003,2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தௌஹீத் உலமாக்களால் மேற்கொள்ளப்பட்ட மிகக் காத்திரமான பிரச்சாரங்கள் காரணமாக அத்வைதக் கொள்கையும் அதன் பிரச்சாரக் கட்டமைப்பும் ஆட்டம் காணத் தொடங்கியது.

அத்வைதக் கொள்கையை ஏற்றிருந்த பலரும் அதனைக் கைவிட்டு விட்டு தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

இதனையடுத்து அத்வைதிகளுக்குத் தலைமை தாங்கியவர்  தொடர்ந்தும் காத்தான்குடியில் தனது பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் ஊரைவிட்டு வெளியேறினார். அத்தோடு கப்று வணங்கிகள் நடாத்திக் கொண்டிருந்த பல்வேறுபட்ட பித்ஆத்தான, ஷிர்க்கான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

பலவருட கால மார்க்க விரோத நடவடிக்கைகள் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்ட திருப்தியில் நாமெல்லோரும் இருந்தோம்.

அப்போதுதான் 2006 ஆம் ஆண்டு நகரசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலில் தேர்தலிலும் இறங்கியது.

கண்டிப்பாக மார்க்க வரையறைக்குள் நின்றே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனப் பிரகடனம் செய்த PMGG எச்சந்தர்ப்பத்திலும் மார்க்க விரோத கொள்கைகள் வளர்வதற்கு துணை நிற்க மாட்டோம் என்றும் மக்களுக்கு உறுதியளித்தது.

அப்படியே PMGG நடந்தும் கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் களமிறங்கிய SLMC அணி அத்வைதக் கொள்கை உடையவர்களையும் இணைத்துக் கொண்டே PMGG க்குஎதிராக களத்தில் இறங்கியது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈமானிய எழுச்சிகளில் முன்னின்று பாடுபட்ட சட்டத்தரணி அப்துல் ஜவாத், மர்சூக் அஹமட் லெவ்வை மற்றும் முபீன் போன்றோரும் அத்வைத ஆதரவாளர்களின் வாக்குகளுக்காக அவர்களோடு அணிசேர்வதற்கு தயங்கவில்லை.

இதன் விளைவாக ஊரில் எவ்வித செல்வாக்கும் தளமும் அற்றிருந்த அத்வைதகொள்கைக்கு ஒக்சிஜன் கொடுத்தது போல் அத்வைதிகளுள் ஒருவர் நகர சபையின் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களிலும் தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பிய ஹிஸ்புல்லாஹ் நலிவுற்றிருந்த அத்வைத வாதிகளை தொடர்ந்தும் பலப்படுத்தத் தொடங்கினார்.

அடுத்த கட்டமாக, வெளிப்படையில்லாத சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அத்வைதிகளுக்கு எதிரான முர்த்தத் பட்டத்தனையும் வாபஸ் பெறச் செய்தார். இதற்குக் கைமாறாக 2008 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் அத்வைத வாதிகள் தமது ஒட்டு மொத்த ஆதரவினையும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கினர்.

இதற்கு பிரதியுபகாரமாக, ஊருக்கு வருவதற்கு நாதியற்றிருந்த அத்வைதிகளின் தலைவரை 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பினன்னர் பெரும் VIP பாதுகாப்புடன் ஊர்வலமாக ஹிஸ்புல்லாஹ் வரவேற்று ஊருக்குக் அழைத்து வந்தார்.

மட்டுமின்றி அவர்களின் கொடியேற்றம், கந்தூரி போன்ற எல்லா பித்அத் வழி பாடுகளையும் அவர்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதிவி செய்தது மாத்திரமின்றி தானும் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இதற்கு நன்றிக்கடனாக 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஹிஸ்புல்லாஹ்வின் பின்னால் அத்வைத ஆதரவாளர்கள் அணி திரண்டனர்.

அத்தேர்தலில் வெற்றி பெற்ற ஹிஸ்புல்லாஹ், அத்வைதக் கொள்கையினையும் அவர்களின் வணக்க வழிபாடுகளையும் தொடர்ந்தும் வெளிப்படையாகவே வளர்த்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு அரசியல் அந்தஸ்த்தினையும் அரசாங்க நிதிகளையும் பெற்றுக் கொடுத்தார். அவர்களின் பள்ளிவாயலைக் கட்டி முடிப்பதற்கு இது பேருதவியாக அமைந்தது.

மட்டுமின்றி அத்வைதிகளும், அவர்களின் தலைமைகளும் நமதூரின் அங்கீகாரத்தினையும் அந்தஸ்த்தினையும் எல்லா மட்டங்களிலும் பெற்றுக் பெற்றுக் கொள்வதற்கும் ஹிஸ்புல்லாஹ் உதவினார்.

தூய மார்க்கத்தின் வளர்ச்சிக்கு உதவாத அரசியல் வாதிகள், மார்க்கத்திற்கு விரோதமானவர்களின் வாக்குகளைப் பெறுவதில் மாத்திரம் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்கு உதவத் தொடங்கினார்கள். அதன் காரணமாக அதே காலப் பகுதியில் அத்வைதிகளின் நிறுவனங்களை பசீர் சேகுதாவூத் பாராளு மன்றத்தில் பதிவும் செய்துகொடுத்தார்.

இப்போது அவர்களின் தரப்பு பிரமாண்டமான பள்ளிவாயலை கொண்டிருப்பதற்கும் ஜூம்ஆநடாத்துவதற்கும் மாநாடு நடாத்துவதற்கும் இப்படியாக அரசியல் வாதிகள் பக்க பலமாக இருந்தனர்.

அதே காலத்தில் பயில்வான் தரப்பினரை வளர்த்து அவர்களின் தரப்பு வாக்குகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஹிஸ்புல்லாஹ் முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். அப்போது மாகாண சபை அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாஹ் முடக்கப்பட்டிருந்த தமது கட்டுமானப் பணிகளை பயில்வான் தரப்பினர் மீளவும் தொடங்குவதற்கு அப்போதைய கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பிள்ளையானிடம் நேரடியாகவே அவர்களை அழைத்துச் சென்று உதவி பெற்றுக் கொடுத்தார்.

நமது தௌஹீத் உலமாக்கள் பிள்ளையானை பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த வேளை அவரே நேரடியாக இதனை நமது உலமாக்களிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இப்படியாகத்தான் நமதூரில் நலிவுற்றிருந்த மார்க்க விரோதக் கொள்கையினை ஹிஸ்புல்லாஹ்வும் ஏனையஅரசியல் வாதிகளும் இந்த நிலைக்கு வளர்த்து விட்டனர். இப்போது அவர்களில் ஒருவருக்கு நமதூரில் உதவித் தவிசாளர் என்ற அந்தஸ்த்தினையும் ஹிஸ்புல்லாஹ்தான் உருவாக்கிக்கொடுத்தார்.

பிற்காலப்பகுதியில்ஹிஸ்புல்லாவின்அணியில்இணைந்துகொண்டாடஷிப்லிபாறூக்கும்இதற்குவிதிவிலக்கல்ல. அரசியலுக்காகஅத்வைதிகளிடத்தில்செல்லமாட்டேன்எனஆர்மபத்தில்சொன்னஇவரும்  பின்னர்அத்வைதிகளிடம்சரணடைந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல தேர்தல்கள் நமதூரில் நடந்திருக்கின்றன.

2006 ஆம் ஆண்டில் நகர சபைத் தேர்தலும், 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலும், 2010 ஆம் ஆண்டில்  ஜனாதிபதி மற்றும் பாராளு மன்றத் தேர்தலும்

2011 ஆம் ஆண்டில் நகர சபைத் தேர்தலும்

2012 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் என இக்காலப்பகுதிகளில் ஐந்து தேர்தல்கள் நடந்துள்ளன.

இந்த 5 தேர்தல்களிலும் மிக வெளிப்படையாகவே மார்க்கத்திற்கு விரோதமான சக்திகளுடன் ஹிஸ்புல்லாஹ்வும், ஏனைய அரசியல் வாதிகளும் அணிசேர்ந்திருந்தனர். இது நாமெல்லோரும் கண்கூடாகக் கண்ட வரலாற்று அனுபவமாகும்.

அரசியலுக்காகமார்க்கத்தைவிலைபேசியதா  PMGG..?

இந்த வரலாற்றுஅனுபவத்தோடு ஒப்பிடும் போது இது வரை காலமும் மார்க்க விடயத்தில் PMGGயின்மிகத் தெளிவான நிலைப்பாடுகளையும் உறுதியினையும் எவரும் மறுக்க முடியாது.

நடைபெற்ற 5 தேர்தல்களில் மூன்றில் PMGG பங்கு பற்றியது. ஏனைய அரசியல் வாதிகளைப்போலவே மார்க்க விடயத்தை விலைபேசி வாக்குகளைப் பெற்றுக் கொள்ள PMGG யும் முயற்சித்திருக்க முடியும். ஆனால் அதனை அவர்கள் ஒரு போதும் செய்யவில்லை. அப்படி மார்க்கத்தை விலை பேசியிருந்தால் அவர்களும்கூட இதை விட பெரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்றிருக்க முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆக மொதத்தத்தில் மார்க்க விரோத சக்திகளை தமது அரசியலுக்காக வளர்ப்பவர்களாக PMGG யைத் தவிர மற்ற அரசியல் வாதிகள் அத்தனை பேருமே இருந்திருக்கிறார்கள்என்பது மட்டுமின்றி தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள்.

எனவே, நடு நிலையாக நின்று , தெட்டத் தெளிவான இந்த வரலாற்றின் அனுபவத்தின் அடிப்படையில் நாம் சித்திப்போமாக இருந்தால் தற்போது எழுந்துள்ள ஷீஆ விடயம்தொடர்பில் நாம் சந்தேகிக்க அல்லது பயப்பட வேண்டியது PMGG யை பற்றி அல்ல. மாறாக ஏனையஅரசியல் வாதிகளைப்பற்றியேயாகும்.

மார்க்கவிரோதஅரசியல்வாதிகளைதௌஹீத்சமூகமும்ஏன்முழுமையாகநிராகரிக்கவில்லை..?

மேலும் இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் யதார்த்த பூர்வமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

 அதாவது மார்க்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மிகவெளிப்படையாகவே ஹிஸ்புல்லாஹ்வும் ஏனையவர்களும் தமது அரசியல் இலாபங்களுக்காக வளர்த்து வரும் நிலையில், தௌஹீதை நிலைநாட்டப் பாடுபடுவதாகக் கூறும் உலமாக்களும் தௌஹீத் ஆதரவாளர்களும்களும் என நாம் அத்தனை பேருமே (அத்வைதிகள்தமதுகொள்கைக்காகஅணிதிரண்டதுபோல்) ஓரணியாகநின்று இதற்குஎதிராக மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன..?

 அரசியல்வாதிகளின்இந்தமார்க்கவிரோதசெயல்களை சில உலமாக்கள் சூசகமாககண்டித்தாலும்அதற்கு எதிரான பிரச்சாரம் தெளிவாகவும் பலமாகவும் இருக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால் மார்க்க விரோத சக்திகளை வளர்த்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு பக்கபலமாக தௌஹீத் உலமாக்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர்எவ்விததயக்கமுமின்றி செயல் பட்டனர்; இன்னமும் செயல் பட்டும் வருகின்றனர். தௌஹீதை போதிப்பதாக கூறும் ஒரு மார்க்க நிறுவனம் கூட மிக வெளிப்படையாகவே ஹிஸ்புல்லாஹ்வின்அரசியலுக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

இன்னொரு வகையில் சொன்னால், மார்க்க விரோத சக்திகளை வளர்க்கும் அரசியலுக்கே இந்ததௌஹீத் அறிவியல் நிறுவனம் தனது வெளிப்படையான ஆதரவினை வழங்கிவருகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மார்க்கத்திற்கு விரோதமானவற்றை நிராகரிக்கவேண்டும் என்ற அடிப்படை ஈமானிய தெளிவும் கூட நமது தௌஹீத் சகோதரர்களிடம் அத்தனைபேரிடமும் முழுமையாக இருக்கவில்லை. அதன் காரணமாக மார்க்க விரோத சக்திகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்த அரசியல் வாதிகளுக்கு கணிசமான தௌஹீத் உலமாக்களும் ஆதரவாளர்களும் எவ்வித தயக்கமுமின்றி நடந்து முடிந்த எல்லாத் தேர்தல்களிலும் ஆதரவளித்தனர் என்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.

மேலும், தமக்கு வேண்டிய சிறியசிறிய உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இப்படி மார்க்கத்திற்கு துரோகமிழைக்கும் அரசியல் வாதிகளை தமது தஃவா நிறுவனங்களுக்கு அழைத்து வரவேற்று உபசரித்து கொரவிப்பதற்கும் நமது தௌஹீத் சகோதரர்கள் தயங்கவில்லை என்பதும் இன்னுமொரு வேதனைக்குரிய அவதானமாகும்.

இவ்வாறு மார்க்கத்திற்கு துரோகமிழைக்கும் அரசியல் சக்திகளை எதிர்த்து பகிரங்கமாகக் கண்டிப்பது ஒரு புறமிருக்க மறைமுகமாகவேனும் அதனை நிராகரிக்கும்  அளவிற்கு  இஸ்லாம் பற்றிய தெளிவு இன்னும் நமக்கு ஏற்படவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

ஏனெனில் அந்தப்  தெளிவு இருந்திருக்குமேயானால்

‘தேர்தல்களில் வாக்களிப்பில் நிராகரித்தல்’ என்கின்ற ரகசிய நிராகரிப்பையாவது தௌஹீத் சமூகம் அல்லாஹ்வுக்காக ஒட்டு மொத்தமாக செய்திருக்கவேண்டும். ஆனால் துரதிஸ்ட வசமாக அப்படி நடக்க வில்லை.

மார்க்கவிடயத்தில்யாரைநம்பலாம்…?

இந்த அனுபவங்களின்அடிப்படையில் பார்க்கும் போது அரசியல் நோக்கங்களுக்காக மார்க்க விடயங்களில் விட்டுக்கொடுக்க முடியாது என்ற விடயத்தில் நமது தௌஹீத் வாதிகளை விடவும் தெளிவோடும் உறுதியோடும் PMGG இருந்துவருகின்கிறது என்பதே யதார்த்தபூர்வமான வரலாற்று உண்மையாகும்.

மேலும்,இதேவரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஷீஆக் கொள்கையை வளர்ப்பதற்கு PMGG பக்க பலமாக இருக்கிறது என்றகுற்றச்சாட்டு எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவருக்கும் புரியும்.

அது மாத்திரமின்றி ‘மார்க்கவிவகாரங்களை பாது காத்தல்’ என்ற விடயத்தில் நம் மத்தியில் இருக்கும் அரசியல் தரப்புகளுக்குள் PMGG யை மாத்திரமே நம்ப முடியும் என்பதும் மிகத் தெளிவான ஒன்றாகும்.

மறுக்க முடியாத உண்மை இப்படியிருக்க,ஷீஆ விவகாரத்தில் PMGG யின் மீது பழிபோட நினைப்பவர்கள் அரசியல் நோக்கத்திற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அத்தோடுமார்க்கத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களாக இவர்கள் இருந்தால் இப்படி மார்க்வரையறைகளையும்மீறி அநியாயமான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க மாட்டார்கள்.

இறுதியாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்

PMGG  யின் உயர்மட்ட உறுப்பினர்கள்எவரும் அகீதாவுக்கு முரணான ஷீஆக் கொள்கையை வளர்ப்பவர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை PMGG தயங்காமல் மேற் கொள்ளும் என்பதனையும் நாம் நிச்சயமாக நம்பலாம்.

ஏனெனில் ஏனைய அரசியல் தரப்புக்களைப் போலன்றி தமது உயர்மட்ட உறுப்பினர்கள் தவறிழைக்கும்போது அதனை மூடி மறைத்து அவர்களைப் பாதுகாக்காமல் உரிய நடவடிக்கைகளை PMGG எவ்வாறு மேற் கொண்டது என்ற  வரலாறும் நம் கண்முன்னே இருக்கிறது.

எனவே, ஷீஆக்  கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்கும் அதே வேளை, அரசியல் ரீதியான எமது சொந்தக் கோப தாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்கானவாய்ப்பாகஇதனை  பயன்படுத்தாது,   இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நேர்மையோடும் இஹ்லாசோடும் அதனை முன்னெடுப்போம்.

அப்போதுதான் நமதுமுயற்சிகளுக்கு நல்ல பலனும் அல்லாஹ்வின் கூலியும் கிடைக்கும்

Advertisements

Comments

 1. fahim says:

  Vilakkam illathavar intha katturaiyay kirukki irukkurar. PMgg yai Koppil eatra edukum muyatchi.

  • Murasil says:

   மிகத்தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இந்த கட்டுரையில் விடயங்களை முன்வைத்திருக்கின்றார் கட்டுரையாளர்…அப்படியிருந்தும் அதனை ஏற்க மறுப்பதென்பது உண்மையில் அறியாமையின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை…

 2. Mohamed Faiz says:

  அருமையான பதிவு. சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இப்பதிவில் பல சேதிகள் இருக்கிறது. பாராட்டுகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: