பணிப்பெண்களுக்கான அதிகூடிய சம்பளம் 350 அமெரிக்க டொலர்

n1407254வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்தந்த நாடுகளில் ஆகக்கூடிய சம்பளமாக 350 அமெரிக்க டொலர்களை பெற்றுத்தருவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நலன்புரியமைச்சு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இதன்படி பணிப்பெண்களை வெளி நாடுகளுக்கு அனுப்பு வதற்கு முன்னர் வீட்டு உரிமையாளர் அல்லது குறித்த நிறுவனத் துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர்

மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு 2015ம் ஆண்டளவில் ஆகக்கூடிய சம்பளமாக 350 அமெரிக்க டொலர்களை பெற்றுத் தரும் பிரதான இலக்கு நோக்கி 2010 ம் ஆண்டு முதல் படிப்படியாக முன்னெடுக் கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இது வரையில் பாரிய வெற்றியளித் திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிணங்க பஹ்ரேயன், எகிப்து, ஹொங்கொங், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், மொரீஷியஸ், கட்டார், சவூதி அரேபியா, சீலெல்ஷ், சிங்கப்பூர், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்யம், மலேசியா, மாலைதீவு, குர்திஸ்தான், சைப்பிரஸ் ஆகிய நாடு களில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கும் 2010 ம் ஆண்டு முதல் இக்காலப் பகுதி வரையில் சம்பளத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருப் பதாகவும் அமைச்சர் டிலான் தெரி வித்தார்.

வெளிநாட்டுக்கு பணியாளராக செல்லும் ஆண், பெண் இருபாலா ரினதும் வயதெல்லையை அதிகரித்தல், தொழில் தொடர்பில் விசேட பயிற்சி அளித்தல், என்.வி.க்யூ 03 இனை ஆகக்கூடிய தகைமையாக்குதல் என்பன சம்பள அதிகரிப்பதற்குரிய சாதகமான விடயங்களாக அமைந் துள்ளன.

2010 ம் ஆண்டில் வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து கிடைத்த 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி 2014ம் ஆண்டில் 07 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.

Leave a comment