சமூகம்பற்றி அக்கறை இல்லாமல் காத்தான்குடியில் ஒரு நரி, அக்கரைப்பற்றில் ஒரு கெரியன்: ஆசாத்சாலி

Asath_Sali-அஸ்லம் எஸ்.மௌலானா-

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஹாபிஸ் நஸீர் அஹமட் 100 மில்லியன் ரூபா செலவு செய்தே வெற்றியீட்டினார். அது அவரது வாப்பாவின் பணமல்ல, அது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய பணமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.

“காத்தான்குடியில் ஒரு நரி, அக்கரைப்பற்றில் ஒரு கெரியன். இவர்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் பற்றி எந்த அக்கறையும் கிடையாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதியிடம் எனது ஆட்சேபனையை தெரிவித்து விட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய நான் முஸ்லிம் காங்கிரசையும் வெளியேறுமாறு ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தினே.

அதற்கு அவர் முன்வரா விட்டால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து சுயேற்சை அணியொன்றை களமிறக்க தீர்மானித்தேன். அவ்வேளை மு.கா. அரசுக் கூட்டில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முன்வந்தது. அதில் மு.கா. சார்பில் போட்டியிடுமாறு ரவூப் ஹக்கீம் என்னை அழைத்தார். அதற்கு உடன்பட்ட நான் அம்பாறை மாவட்டத்தில் அல்லது திருமலையில் இடம் தருமாறு கேட்டேன்.

ஆனால் அதற்கு உடன்படாத ஹக்கீம் நரியின் இடத்தில் என்னைக் களமிறக்கினார். மு.காங்கிரஸ் செல்வாக்கு இழந்து ஹக்கீம் கால் பதிக்க முடியாதிருந்த காத்தான்குடியில் என்னை போட்டியிட வைத்தார். நான் துணிச்சலுடன் முகம் கொடுத்து வெறும் 5 நாட்கள் மட்டும் பிரச்சார வேலைகளைச் செய்து 7000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தேன்.

அங்கு வெற்றி பெற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட் 100 மில்லியன் ரூபா செலவு செய்தே வெற்றியீட்டினார். அது அவரது வாப்பாவின் பணமல்ல, அது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய பணமாகும். நான் மக்கள் மனதில் இடம்பிடித்தேன். நரியின் எதிர்ப்பால் காத்தான்குடிக்கு வர முடியாதிருந்த ரவூப் ஹக்கீமும் எனது பக்க பலத்தால் அங்கு வர முடிந்தது.

அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வுக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்தனர். ஹக்கீம் அப்படித்தான் மேடைகளில் முழங்கினார். பள்ளிவாசல்களை உடைக்கும் அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காண்டா மிருகம் என்றார். இப்படியெல்லாம் சொல்லி நாமெல்லாம் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை எடுத்துக் கொண்டு ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டார்.

அது மட்டுமா? மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும் சட்ட மூலத்தை மு.கா. குழுத் தலைவர் ஜமீல் மூலம் ஆதரிக்க செய்தார். பின்னர் பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக அதனை மு.கா. ஆதரித்தது.

அது போன்றுதான் இப்போது 13 ஆவது திருத்த சட்ட விடயத்திலும் நாடகமொன்றை அரங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட இந்த 13வது திருத்த சட்ட அதிகாரங்கள் மக்களுக்கு முழுமையாக கொடுக்கப்படாதிருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு தீர்வாக 13+ ஐ தருவதாக கூறினார். இந்த உத்தரவாதத்தை இந்திய அரசுக்கு மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையிலும் கூறினார். ஐ.நா.வின் தருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி அதற்கு பதிலாக LLRC என்ற தீர்வை கொண்டு வந்து அதனைத் தருவதாக ஜனாதிபதி கூறினார். பின்னர் அந்த LLRC அறிக்கையைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இன்று 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விமல் வீரவம்ச, சம்மிக்க ரணவக்க, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற பேரின சக்திகளை அணி திரட்டி சிறுபான்மையினரை நசுக்கும் வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பள்ளிவாசல்களை தாக்குவது, முஸ்லீம்களின் கடைகளை உடைப்பது இறைச்சிக் கடைகளுக்கு தீ வைப்பது போன்ற தீவிரவாத வேலைகளைச் செய்து வருகின்ற பேரினவாத சக்திகளுக்கு அரசாங்கம் துணை நிற்கிறது.

இவற்றையெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற நமது அமைச்சர்கள் மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொதுபல சேனாவைக் காத்தான்குடிக்கு கொண்டு வரப் போகின்றேன் என்று ஹிஸ்புல்லா சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் இவர் ஞானசார தேரரின் தம்பியா? மறைத்த தலைவர் அஷ்ரப் இவருக்கு நரி என்று சரியாகவே பெயர் வைத்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியின் ஊரான தங்கல்லயில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் இறைச்சிக்கடைக்கு தீ வைக்கும் போது பொலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அனுராதபுரத்தில் பள்ளிவாசலை உடைக்கும் போதும் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் கூட பார்த்துக் கொண்டிருந்தனர். இவைகளைத்தான் நான் ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பினேன்.

காத்தான்குடியில் ஒரு நரி, அக்கரைப்பற்றில் ஒரு கெரியன். இவர்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. இவர்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மறுமையில் நிச்சயம் கேள்வி கணக்கு உண்டு. உனக்கு தந்த தலைமைத்துவம் என்ற அமானிதத்தை பாதுகாத்தாயா என இறைவன் கேட்பான். அப்போது மஹிந்ததான் எல்லாம் செய்தார் என இறைவனிடம் கூற முடியாது.

13 வது திருத்தம் தொடர்பில் தான் விரும்பியதை செய்வேன். விருபியவர்கள் இருக்கலாம். விரும்பாதோர் விலகிச் செல்லலாம் என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இதனையும் கேட்டுக் கொண்டு  வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைவர்கள்  அரசுடன் இன்னும் ஓட்டிக் கொண்டிருகின்றனர்.

நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது எனது மனைவியும் மகளும் ரவூப் ஹக்கீமின் காலில் விழுந்ததாகவும் அதனால் அவர் ஜனாதிபதியுடன் பேசி என்னை விடுவித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இறைவன் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவர்களது வங்குரோத்து அரசியல். என்னை விடுவிக்க ஹக்கீமால் முடியுமா? அந்தளவுக்கு அரசில் அவருக்கு மதிப்பிருக்கிறதா?

மக்களின் பிரார்த்தனையும் கிழக்கு முஸ்லிம்களின் போராட்டங்களும் சர்வதேசத்தின் தலையீடுகளுமே என்னை விடுவிக்க காரணமாக அமைந்தது. இதனால் 3 மாத தடுப்புக் காவலுக்கு ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்த நிலையில் எட்டு நாட்களில் விடுவிக்கப்பட்டேன்.  அதற்காக நன்றி தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதைக்கூட தடுப்பதற்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

நாம் எதற்கும் அஞ்சக் கூடாது. சமூகத்தின் நலன்களுக்காக- உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் துணிந்து முன்வர வேண்டும். அதற்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர் சுமத்திரன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, நவ சிஹல உறுமய கட்சி தலைவர் சரத் மனமேந்திர, எக்சத் லங்கா ஜனதா கட்சி தலைவர் சோமசிறி அப்புஆராய்ச்சி, கல்முனை வர்த்தக சங்க முக்கியஸ்தர் கே.எம்.ஹாதிம், டாக்டர் வை.எல்.எம்.யூசுப்  ஆகியோரும் உரையாற்றினர்.

Comments

  1. EASTMUFTI says:

    மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லா கையாலாகாதவர் என்றும், தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றத் தெரியாதவர் என்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கடுமையாகச் சாடியுள்ளார்.

    நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு அமைச்சர் அதாவுல்லாவை கடுமையாக சாடியுள்ளார்.

    டெங்கு வராமல் தடுப்பது உள்ளூராட்சி அமைச்சின் பொறுப்பில் உள்ள விடயம். ஆனால் நமது உள்ளூராட்சி அமைச்சருக்கு டெங்கு நோய்த் தடுப்பு செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்துக் கூட எதுவும் தெரியாது.

    பொதுமக்களுக்கும் இதுபற்றி எதுவும் தெரியாது. டெங்கு நோய் வந்தால் எல்லோரும் சுகாதார அமைச்சரையே குற்றம் சொல்கிறார்கள்.

    ஆனால் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் தான் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையும், நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ஆனால் பொறுப்பான அமைச்சர் தனது கடமையை சரிவர செய்வதில்லை. அவரை யாரும் குறை காண்பதுமில்லை.

    சுகாதார அமைச்சின் மூலம் டெங்கு பரவும் போது சிகிச்சை தான் அளிக்க முடியும். அதனை நான் சிறப்பாக செய்துள்ளேன்.

    இதனை எந்த இடத்திலும் நான் பேசத் தயார். யாருக்கும் நான் அஞ்சப போவதிலலை என்றும் அமைச்சர் மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

  2. mohamede shafeek says:

    Colombo ilum sila O naaikal undu sir.

  3. Lafir says:

    நரி என்ற வார்த்தை சரிதான், ஆனால் அக்கரைப் பற்றானைப் பற்றி சொன்ன வார்த்தை மிகவும் மோசமான ஒன்று.

    கொழும்பில் உள்ள வாய்க்கால் முடக்குகளில் இருக்கும் குடு காரர்களும், கஞ்சா புகைப்பவர்களும், பாதாள உலக ரவ்டிகளும் பயன்படுத்தும் கெட்ட தூசன வார்த்தையை, முஸ்லிம்களின் தலைவர் என்று வேடம் போடும் அஸாத் சாலி, பொது மேடையில் பயன்படுத்தியுள்ளமை, இவர் யார் என்பதனை தோலுரித்துக் காட்டுகின்றது.

  4. Lafir says:

    மற்றவர்களைப் பற்றி நரி மற்றும் மோசமான வார்த்தைகளால் கதைப்பதெல்லாம் இருக்கட்டும், உங்களுடன் ரியாஸ் சாலி என்று ஒரு சொந்த சகோதரர் இருக்கின்றாரே, அவரைப் பற்றி ஏன் ஒன்றுமே கூறுவதில்லை?

    பொது பல செனாவுட்ட்கு முஸ்லிம்கள் பற்றிய தகவல்களைக் கொடுத்து சமூகத்தைக் காட்டிக் கொடுத்ததே உங்கள் சகோதரர் தானே? நாணவும் தம்பியும் சேர்ந்து முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம்.

  5. Rakkeeb says:

    நீங்கள் ஒரு பச்சோந்தி என்று சொல்லாமல் சொல்கின்றீர்களா மிஸ்டர் ஆசாத்சாலி?

  6. ஹைய்யு says:

    திரு. ஆசாத் சாலி அவர்கட்கு,

    “கெரியன்” என்பது சிங்களத்தில் ஆகக் கேவலமான, எந்தஒரு பண்புடையவனும் உச்சரிக்க மறுக்கும், கூசும் அடிமட்டமான சொல்! முஸ்லிமகள் அறவே பாவிக்கக் கூடாத சொல். இருந்தும் பாவித்திருக்கிறீர்கள். உங்கள் தவறல்ல – நீங்கள் வளர்க்கப்பட்ட முறையும் – நீங்கள் வளர்ந்த இடமும் – இப்படியான அசிங்கமான, கேவலமான சொல்லுகளுக்குப் பழக்கப்பட்ட இடமாக அமைந்திருப்பதால் – உங்களுக்கு அது இயல்பாகவே வந்திருக்கிறது. உங்கள் அநாகரிகம் எனக்கு ஒளவையை நினைவூட்டுகிறது.

    “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு – மேலைத்
    தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
    குலத்தளவே ஆகும் குணம்.

    நரிகளாகட்டும் இல்லை கெரிகளாகட்டும் – இதை ஒரு பக்கம் வைத்துவிட்டு. உங்களைப்பற்றியும் உங்கள் குடும்பம் பற்றியும், உங்கள் இஸ்லாமியம் பற்றியும், அதன் விழுமியங்கள் பற்றியும் சற்று நிதானமாய் நின்று யோசித்து விட்டு – சமூகம் பற்றி யோசிக்கலாம்???

    தனது மகள், ஒரு குமரி, தன் மனைவி போன்றோர், பொது இடங்களில் – ஒழுங்காக ஹிஜாப் செய்யாமல் – மூட வேண்டியவைகளை மற்றவர்கள் கண் தேடவைக்க அணிந்தாற்போல் –

    நம் சமூகத்திற்கே ஒவ்வாத வகையில் அணிந்து கொண்டும், இன்னும் பன்சலைகளுக்குப் போய் அவர்கள் கற்சிலைகளுக்கு காரியம் பண்ணிவிட்டு வந்தும்,

    கப்ரு வணங்கும் பள்ளி நிருவாகியுமாய் இருந்து கொண்டும்.

    முந்தநாள் UNP, நேற்று UPFA, இன்று NUA! நாளை என்னவோ என்று தெரியாமலும், இப்போ இருப்பதில் எத்தனை நாளைக்கு என்று தெரியாமலும், தூரநோக்கு இல்லாமலும் – விசுலுகளுக்காகப் பேசும் உங்களிடம் என்ன தரம் இருக்கப்போகிறது.

    எங்களைப் பொறுத்தவரை நீங்கள் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுதான். உங்கள் எல்லோரின் எண்ணங்களும் ஒன்றுதான் – உங்கள் இலாபம் இலகுவாக வரவில்லையென்றால் – உங்கள் நாடகங்கள் மேடைகளில் அரங்கேறும். சில கூத்தாடிகள் ஆட, பாவப்பட்டவர்கள் பட்டாசுபோட, வேலையற்றவன் வேடிக்கை பார்க்க, பாவம் எம் மக்கள் ஞாபகசக்தி குறைந்தவர்கள் – உங்களுக்கு புதிதாக உதித்த இந்த சமூக ஞானம் என்னவென்று தெரியாமல் – வரவேற்றிருக்கின்றனர். நாங்கள், கிழக்குமக்கள், விருந்தோம்பற்காரர்கள். எதிரியும் ஏற்றம் பெற நினைப்பவர்கள். எங்கள் வரவேற்ற்பில் மயங்கி எங்களை மடையர்களாய் நினைத்திருக்கிறீர்கள்.

    திருந்துங்கள் பின் திருத்துங்கள் அதன்பின் திருப்பங் காணுங்கள். நிறுத்துங்கள், தயவு செய்து நிறுத்துங்கள் – நெறி தவறிய வார்த்தைகள், வாழ்க்கைகள் எல்லாவற்றையும் நிறுத்துங்கள். முழு முஸ்லிமாய் ஆகி முன்னேறப்பாருங்கள்! முன்னேற்றப்பாருங்கள்.

    நன்றி

  7. meenavan says:

    ஆசாத் சாலியின் சகோதரர் சிலவேளை பொது பல சேன குறிப்பிடும் பாரம்பரிய முஸ்லிமாக இருக்கலாம்… அது உண்மையாயின் அமைச்சர் அதாவும் அதனை சேர்ந்தவர்தான்..எதுவாக இருந்தாலும் ஆசாத் சாலியின் சொற்பிரயோகம் கண்டிக்க தக்கது.

  8. அப்பாவி ஆதம் காக்கா says:

    BBS புண்ணியத்தில தலைவன் ஆனா தாதா……..ஒரு கதை ஞாபகம் வருது… சண்டியன 40 நாள் கூட்டிப் போய் பயான் பண்ணச் சொன்னாகளாம். மேலான பெரியோர்களே சகோதரர்களே , நம்மிட நபிக்கு அந்தக் கெரியன் அபூஜஹ்ல் …..எண்டு பயான் பண்ணின கதை ஞாபகம் வருது

  9. Ahamed Kalmunai says:

    இது தான் இவர்கள் மட்டகலப்பன் மடையன் என்று பன்னெடு காலமாக கூறி வருகிறார்கள். எங்கேயோ இருந்து வந்து கிழக்கு மாகாணத்தின் நீள அகலம் தெரியாத இவர்கள் எல்லாம் தலைவர்கள் து வெட்கம் கெட்ட மட்டகலப்பன். சார் ரசேக் பரீட் வந்து அம்பறைல் தேர்தல் கேட்ட போது மக்கள் அவரை தோற்கடித்து Ninthavur வுரின் suprinder i பாராளுமன்றுக்கு அனுப்பிய எமது முன்னோர்களின் பாரம்பரியம் மறக்கமுடியாதது

  10. மஸ்ஊத் says:

    ஆஸாத் சாலி அவர்களுக்கு நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் கூறிக்கொள்வது நீங்கள் யாரையும் விமர்சித்து , ஏசி அரசியல் செய்ய வேண்டாம் எதிர் காலத்திலாவது முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றுபடுவார்கள் . ஏனென்றால் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமான காரியமாகும் .எனவே எமது நாட்டில் இருக்கின்ற சட்டதிட்டங்களை விளக்கி , முஸ்லிம்களின் தேவைகளை உணர்ந்து உங்களின் அரசியல் பணியை முன்னோக்கி செல்லுங்கள் . அதே போன்று முஸ்லிம்களுக்கு மிகவும் ஏற்ற , முஸ்லிம்களின் உருமைகளை வென்று கொடுக்க கூடிய முஸ்லிம் கட்சியோடு இணைந்து உங்கள் சேவைகளை செயுங்கள் .ஏனென்றால் முஸ்லிம்களின் ஒற்றுமையில்தான் முஸ்லிம்களின் உரிமைகள் உயிர்வாழும் .

  11. Mattakkalappaan says:

    நரி என்று இவர் கூறு கிறாரே?
    அந்த நரி தனது ஊருல ஊருக்காக ஏதாவது செய்யுது…
    இவருக்கு ஒரு நரி அல்ல ஒரு எலி ஆகவும் மாற சாத்தியம் இல்லை…
    இல்லாவிட்டால் எம்மவர் இடம் வந்து எம் பிரதேச அரசியல் வாதிகளுக்கு
    கெட்ட வார்த்தையில் திட்டுவாரா?

  12. Niaz........ says:

    neenke mubarak moulaviya meet pannunke…………
    mahindavin vaal pidithukkondirukkum intha naaihalukku seruppala adikkanum…….
    mubarak moulavi avarre oorla iruppavana onnume kedke maaddaro
    ellavatrukum slmc ya mattume vasai paaduhiraar…………

  13. IMRAN NAZER says:

    ஆதங்கத்தால் ஆக்ரோசமாக பேசியுள்ளார் !!அவர் நடாத்தவிருந்த கூட்டத்தை தடுப்பதற்கு விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் !!முஸ்லிம் சமூகத்துக்காக் சிறைசென்ற

    ஒருதலைவர் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும் பொதுபல சேனாவை

    எதிர்த்து களம் கண்டவர் அதிகாரம் மிக்க தலைவர்கள் தங்கள் ஆசனத்துக்காக

    வாய்மூடி அடக்கிவாசிக்க தன்பதவிகளை உதறி எறிந்துவிட்டு சமூகத்துக்காக

    குரல்கொடுத்தவரை கழிவு எண்ணை ஊற்றி வரவேற்பு பொது பலசேனாவை வெத்திலை பாக்கு வைத்து வரவேற்கும் சமூகம் !!நாம் நன்றி மறந்தவர்களாக மாறிவிடல் ஆகாது

    ஆசாத் சாலி சகோதரர் கொள்கையை வைத்து இவரை மட்டம் தட்ட வேண்டாம் !!

    ஏன் நூஹு நபி மகன் காபிர் ஆகவில்லையா ?!!

    நொரை சோலை சஊதிஅ றேபிய வீடுகள் அதாவுல்லாவின் அகங்காரத்தால்

    இல்லாமல் போனதை மறந்து விடாதீர்கள் இதற்கு சிங்களத்தில் கெரிவெட என்று

    சொல்வார்கள் !!

    • அவன்ட சொந்த குடும்பபே அந்நியர்கள் போல் ஆடை அணிந்து விகாரைக்கி போய் அழுது தொழுது வணங்கி வழிபடுவதெல்லாம் கண்களுக்கு படாதா???

    • Lafir says:

      காட்டிக் கொடுப்பதில் முன்னணி வகிப்பது அசாத் சாலியின் சகோதரர் ரியாஸ் சாலிதானே?

      முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படக் காரணம் துரோகி ரியாஸ் சாலி. அவனைப் பற்றி வாயே திறப்பதில்லை, ஏன்?

      எல்லாமே ஒரு நாடகம், BBS இனவாதம்தான் அசாத் சாலியின் மூலதனம், அது இல்லாவிட்டால் அசாத் சாலியால் பிழைப்பு நடத்த முடியாது. தேசிய அரசியலில் எவ்வளவோ செய்து பார்த்தார், பல முறை கட்சி தாவிப் பார்த்தார், வெற்றி பெற முடியவில்லை, மக்கள் நிராகரித்து விட்டனர். இப்பொழுது இவரது சகோதரர் ரியாஸ் சாலியால் தகவல் வழங்கப்படும் இனவாதத்தை காட்டி மக்களை மடையர்கள் ஆக்கப் பார்க்கின்றார்

    • Lafir says:

      இம்ரான் நசீர்,

      சம்மந்தமில்லாமல் நூஹ் நபியையும் அவர் மகனையும் இங்கே ஒப்பிட வேண்டாம். நூஹ் நபியின் மகன் அல்லஹ்வைஉ ஏற்றுக் கொள்ளாமல் தனது தந்தைக்கு எதிராக் இருந்தானே தவிர முஸ்லிமாக நடித்துக் கொண்டு, முஸ்லிம்களை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கவில்லை

      மேலும், அசாத் சாளியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து, அவரின் பிரச்சார வேலைகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதே ரியாஸ் சாலிதான். ஆகவே, ரியாஸ் சாலியையும் அசாத் சாளியையும் பிரித்து பேசுவது எடுபடாது.

      அசாத் சாலியின் மனைவியும் மகளும் கன்காராமை பன்சலைக்கு பூஜைக்கு சென்ற சமயம் அவர்களை ஒருங்கிணைத்துச் சென்று அருகில் நின்றதே ஐந்தே ரியாஸ் சாலி, மறக்க வேண்டாம். தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்ல்கள்.

      தன பதவிகளை தூக்கி எறிந்தார் என்று சொல்லுவதற்கு இவர் ஒன்றும் அமைச்சர் பதவி வகிக்கவில்லை. தேசிய அரசியலைப் பொருத்தவரை அசாத் சாலி தோல்வியடைந்த ஒரு அரசியல் வாதி. இவரால் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியவில்லை.

      இவர் வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றதே இல்லை. இவர் கொழும்பு மக்களால் நிராகரிக்கப் பட்ட ஒரு அரசியல் வாதி என்பதே உண்மை ஆகும்.

      இவரது பின்புலம் மிகவுமே சந்தேகத்திற்குரிய ஒன்று. முஸ்லிம்கள் இவர் விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இவரை நம்பக் கூடாது. முஸ்லிம்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் விசேட சலுகையான ரமலான் கால பாடசாலை விடுமுறைக்கு ஆப்பு வைக்க இவர் முயன்றதனை யாரும் மறக்க கூடாது

  14. இந்த கப்ரு வணங்கிக்கி முஸ்லிம்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது கொழும்பு கூவதில் வளர்ந்த சேரிவாழ்கை மேடையிலும் கூவமாய் பேசவைக்கிறது இந்த சோத்துமாடை???

    கப்ரு வணங்கிகெல்லாம் எந்த முஸ்லிமாவது துஃஆ செய்வார்களா அப்படி துஆ செய்தாலும் அது அல்லாஹ்விடதில் கவனதில் கொள்ளபடுமா தூக்கி குப்பையில் போடபடுமா? ………….ன் சேர்ந்து நாடகமாடும் பெரும் நடிகன் இவன்??? இந்த சோத்துமாடை நம்புவது தங்கள் தலையில் தாங்களே பெற்றோல் ஊற்றி எரித்து கொள்வதட்கு சமன்???

  15. Faizal-Eravur says:

    Azath Shally is on a wrong track and misguiding our youths with his usual adventure. He has a no vison for our community but working on someone’s agenda. He has a dream to become a national leader for our commnity, it cannot be happened because of his stupidiness and emotional activities rather rational. May Almighty Allah guide him correct path!

  16. zahran says:

    thalaivar rouf sir avarhal unkal thayaval kky vanthar enpathu unkal appattamana poi ean ippadi poi solrinka kky il mubeen slmc la erukum pothu thalaivar payamillamal kky varuvar vanthar for ex kky uc election meatings , muathinmar sammealana koottam athala unkada poi nippatunka

  17. AW Hussain says:

    ஆசாத் சாலி (சளி)…உம்மை நினைக்கும் போது பரிதாபப்படுவதா அல்லது கோவப்படுவதா என்று புரியவில்லை …..

    நீர் மாட்டுமல்ல உமக்கு முன்னரும் colombo ஐ சேர்ந்த பல அரசியல் வாதிகள் மட்டக்களப்பான் தலையில் சாணி கரைச்சு ஊதலாம் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு போனதெல்லாம் எங்களுக்கு தெரியும்……

    இவ்வளவு காட்டமாக கிழக்கு அரசியல் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் சமூகத்துக்கு குரல் கொடுக்கவில்லை எண்டு கூவும் நீ….இன்னும் ஏன் வாடா கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளின் கையாலாத தனத்தை பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை….

    குறிப்பாக Fowzi (உன் தாய் மாமன்), கோமாளி அஸ்வர் , M .H . முஹம்மது , காதர் (உண்மையான கெரியன்) , இன்னும் சில UNP சோனி MP மாரு….

    நான் இதற்கு முன்னரும் உம்மை பற்றி தலைமைத்துவத்துக்கு பொருத்தமில்லாதவர் என்று கூறியுள்ளேன் அதை சரி என்று நிரூபித்துவிட்டாய்…..

    நம் முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமாகவும் , கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாத தீவிரவாதம் உள்ளது என்று சொன்ன உன் அண்ணனை முதலில் கெரியன் என்று சொல்லி அறிக்கை விடு……

    எங்கள் கிழக்கு முஸ்லிம் மக்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் மட்டுமல்ல விருந்தோம்பலில் விண்ணர்கள்….அந்த நல்ல பண்பை கொச்சை படுத்தும் …….. பரம்பரையில் வந்த உமக்கு இதெல்லாம் புரியாது……

    முதல்ல உங்கட …..ய கழுவுங்க அப்புறம் அடுத்தவன் நாத்தத்த பத்தி யோசிக்கலாம்…..

Leave a reply to மஸ்ஊத் Cancel reply