Advertisements

கிழக்கு மாகாண பால் பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தினை நிறைவு செய்யும் வைபவம்

-நமது செய்தியாளர்-

கிழக்கு மாகாண பால் பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தினை நிறைவு செய்யும் வைபவம் நேற்று (29.5.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவிலுள்ள அமத்திஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் உதவியுடன் லேன்ட் ஓ லேக்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த மூன்று வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பால் பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தினை நிறைவு செய்யும் இன்றைய வைபவத்தில் யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் சிரேஷ்ட்ட ஆலோசகர் மார்க் லெப்பட், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, லேன் ஓ லேக்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி வீவன் ஜோன், லேன்ட ஓ லேக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யு.எல்.ஜௌபர் சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உட்பட யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள், லேன்ட் ஓ லேக்ஸ் நிறுவன அதிகாரிகள் கால் நடை வைத்தியர்கள் பால் பண்ணை உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது இத்திட்டத்தின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த திட்டத்தினூடாக  வெற்றிகரமாக  மேற் கொள்ளப்பட்ட பால் பண்ணையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

2009ம் ஆண்டு ஆரம்பமான பால் பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டம் மூன்று வருடங்கள் நடைபெற்றுள்ளன.

இதனுடாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில்  தாண்டியடி, கடவத்தமடு, காவத்தமுனை, மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா ஆகிய நான்கு இடங்களிலும் பால் குளரூட்டும் நிலையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டதுடன் இதில் 4,000 பயனுகரிகள் நன்மையடைந்துள்ளனர்.

மண்முனை மேற்கு, வெளிக்கந்த எல்லைக்கிராமங்கள், கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவகளிலும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலும் இதனூடாக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு பயிற்சியளித்தல் சினைக்குட்டிகளை வழங்குதல் பால் உற்பத்திகளை அதிகரிக்கச்செய்தல் போன்ற உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: