Advertisements

கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (2nd update-காணொளி இணைப்பு)

நமது செய்தியாளர்/

MACM.ஜெலீஸ்/அபூ ஜுமைல்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் அதன் சூறா சபை உறுப்பினர்களும் கடத்தல் நாடகம் ஒன்றை பொய்யாக அரங்கேற்றி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீதும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதற்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து இன்று (10.2.2012) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றதது.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் அப்பள்ளிவாலுக்கு முன்பாக ஆரம்பமான இக்கண்டன பேரணி காத்தான்குடி பிரதான விதியிலுள்ள ஹிஸ்புல்லா கலாசார மண்டபம் வரை நடைபெற்றது.

கண்டன பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கி நின்றதுடன் கோசங்களையும் எழுப்பினர்.

இதன் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களையும், கடத்தப்பட்டதாக நாடகமாடிய அதன் முக்கியஸ்தர் அஸாம் என்பவரையும்   பொலிசார் கைது செய்ய வேண்டுமெனக் கேட்டு மகஜர் ஒன்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டது.

இந்த கண்டன பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் உட்பட நகர சபை உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கான மக்களும்  கலந்து கொண்டனர்.

போட்டோவினை பெரிதாக்கிப் பார்க்க போட்டோவின் மீது க்ளிக்(click) பண்ணவும்

Advertisements

Comments

 1. hasan says:

  THINK BEFORE YOU LEAP, Mr.P….G! Society is not for Business/Sale:When the time of Calamity by Terrorist, where were you? You forgot those time. Why do you make separation among our minority. You may be a big philanthropist. Don’t betray community;But Vigilant them against truth. Everybody will experience for what they did harm/good. So Don’t think Yours & Mine. It’s ours. Kattankudy is ours. Not only Kattankudy, wherever muslims live is our kith & kin. Don’t think u r the only man who literate in Kattankudy.

 2. “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே..” என்ற பழைய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன இந்த நல்லாட்சிக்கூட்டம் எனும் “படித்தமட்டம்” (படித்த + மட்டமான) செய்யும் அரசியலை நினைக்கையில். இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் செய்யும் இலட்சணம் இதுதானோ? சேற்றைக் கண்டால் மிதித்து தண்ணீரை கண்டால் அதனை கழுவிக்கொள்ளும் இந்த கூட்டத்தினர் அரங்கேற்றிய நாடகம் இன்று முழு உலகுக்கும் அம்பலமாகிவிட்டது. (இப்படி அம்பலமாகாமல் போன நாடகங்கள் எத்தனையோ..? அல்லாஹுக்குத்தான் வெளிச்சம்) இந்த “கீ……ன” அரசியல் செய்வதற்கு பதிலாக உங்களுக்கென்று இருந்த “புத்திஜீவிகள்” என்ற அந்தஸ்தைக்கொண்டு அதே மதிப்புடன் நம் சமூகத்துக்கு சேவையாற்றி இருக்கலாம். அல்லது இஸ்லாமிய அரசியல், சூராசபை, அமீர், என்றெல்லாம் மக்களை பேக்காட்டாமல் எல்லோரையும் போல் ஓர் சாதாரண அரசியல் கட்சியை அமைத்து அதன் பின்னர் இந்த தில்லு முல்லுகளை நடத்தியிருக்கலாம் – புனிதமான இஸ்லாத்தின் பெயராவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

  ஊரின் குப்பை பிரச்சினைக்கு தீர்வை முன் வைப்பதற்கு முன்னர் உங்கள் இயக்கத்துக்குள் இருக்கும் குப்பை பிரச்சனைகளை சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

  தம்பி அ…, “எல்லாத்தையும் ரகு…. சேர் பாத்துக்குவாரு” என்று பெருமையடிச்சு திரிஞ்ச உம்மிட இன்றைய நிலைமையை நினைத்தால் என்னால் பரிதாபப் படுவதை தவிர ஒன்றும் செய்ய முடியல்ல. எல்லா “ரகுமான்களுக்கும்” மேலான சர்வ வல்லமை பொருந்திய ஒரு ரகுமான் இருக்கிறான் என்பதை மறந்து செயட்பட்டவர்களின் கதி இதுதான் தம்பி. தம்பி இந்த உபதேசம் உனக்கு மட்டுமில்ல… உன்னை கைவிட்ட கூட்டத்தினருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்துகொண்டு வால் பிடிக்கிற எல்லோருக்கும்தான்…

 3. good comment niharudeen

 4. தீவிரவாதிகளாக காத்தான்குடி முஸ்லிம் இளைஞர் சமூகத்தை சித்தரிக்க முனைந்த ர….. கைது செய்யபடுவாரா???

 5. nibras says:

  oruvar saite tappu elloraium pali kooruvathu enthe vitathil niyayem………..

 6. nibee says:

  அ… செய்த தவருக்கு….. மற்றவர்கள் மீது அபான்டமாக பலி சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை…. பலி சுமத்துவோர் சுத்தமும் இல்லை… சுமத்தப்படுவோர் குற்றவாலியும் இல்லை… சுயநல வாதி அ.. கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்…

 7. Nooman says:

  கடத்தல் நாடகத்தின் முக்கிய கதாநாயகன் அவர்களை கைதுசெய்யக்கோரி இப்போது பலரும் கூறுகின்றனரே…. குறிப்பாக அந்தக்கூட்டத்தின் சூறா சபை உறுப்பினர்கள் உட்பட….

  அவர்கள் அவரை வைத்து விசாரணை செய்த பின்னர் உண்மை புலப்பட்டதென்று தெரிந்தும் அவரை பொலிசில் பிடித்துக்கொடுக்கமால் விட்டதன் சூட்சுமம் என்ன?

  எல்லாம் ஒரு திட்டமிட்ட செயல்தான்….. தங்களது படித்த மூளைகளை அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கும் பழிவாங்குவதற்கும் இழிவுபடுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும்தான் இந்த கூட்டம் பயன்படுத்துகின்றதே தவிர வேறு நல்ல விடயங்களுக்கில்லை.

  இவர்களுடைய செயலால் உண்மையாகவே படித்து நல்ல பல காரியங்களை அடக்கமாக செய்து வரும் ஏனையவர்களுக்கும் கெட்ட பெயர்…

  இந்தக் கூட்டம் சதி செய்வதில் கைதேர்ந்தது என்பது I…A முதல் P….G வரையான சகல நடவடிக்கைளிலும் சில அல்ல பல விடயங்கள் இருநது வெளிப்பட்டுவிட்டது இந்த கடத்தல் நாடகத்தைப் போன்று..

  என்ன ஒரு மனவருத்தம் என்றால் இவர்களுடைய படிச்ச மட்டமான சில பேச்சுக்களை நம்பி இன்னமும் நல்ல மனம் படைத்தவர்கள் சிலர் அவர்களுக்கு அடிபணிந்து கிடப்பதுதான்…

 8. nambikkaiyodu pmmg asamai mudhalil nambinalum asfarai irudhiyaha kaappatriyadhum pmgg tan

 9. Jaufar Mohd. Haneefa says:

  Here the main problem is one selfish has stretched the community in to the big trouble, in future also he can do anything against to the community for his own benefits.

  It is my personnel opinion PMGG is a good association, but it is failed to keep the proper members around, and this is the experience of PMGG. and this is the indication that, it got “BLACK SHEEPS” one the team, one of the example only came to the picture currently. and the responsible people of PMGG has to take all the responsibility of this DRAMA. and this is the biggest lesson PMGG got “Please don’t mingle un machured boys with your senior members”

  and it is the entire responsibility of PMGG to protect the community against the worst complain raised by the PMGG itself.

  anyway the trouble maker should be punished, and he should be separated from the community and he should not have any rights with our community.

  And Dear Mr. Rahman, i am just wondering how you simply started relay with nonsense statement, since you are an icon of KKY community.

  Also comments from Mr. Niharudeen is reliable.

 10. AHAMEE says:

  அசாமை பொலிசார் கைது செய்யாமல் pmgg நிச்சயமாக பாதுகக்க்கும் அவர்கள் நேரடியாக செய்யாவிட்டாலும் அவர்களின் முகவர்கள் முலம் நடைபெறும் அசாமை பொலிசார் கைது செய்தால் இவரகளின் நடாகம் ஆதாரத்துடன் வெளியாகிவிடும்

 11. இவ் விடையம் இரண்டு தனிப்பட்ட நபர்களின் அரசியல் நடவடிக்கை அன்றி வேறில்லை. இதனை ஊர் விடயமஹா சித்தரித்து ஊர்வலமும் நடந்தேறி உள்ளதன் இரஹசியம்தான் என்ன? இதனை ஹி…… & அ…… இருவரும் தனிப்பட்ட பிரச்சினை இணை அவர்ஹலாஹவே தீர்த்து கொள்வதை விட்டு விட்டு இவ்வாறன எதிர்ப்பு ஆர்ப்பட்டன் வேருமேனே அரசியல் சுயலாபம் கருதுபவர்களின் நடவடிக்கை அன்றி வேறில்லை.

  • Nooman says:

   ஆஹா என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு… 2 பேருக்கு மட்டும் உள்ள பிரச்சனையா? அடப்பாவிகளாக…. அப்பறம் என்னத்துக்கு பத்திரிகையாளர் மாநாட்ட கூட்டி கிழக்கு தீவிரவாதம் தலைதூக்கிட்டு, பிரதியமைச்சரையும் தவிசாளரையும் கண்ணை மூடிட்டு பழிபோட்டது ..?

   இப்படியெல்லாம் செய்தால் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தவர்களுக்கு கோபம் வராதா?

   இதென்ன பிரச்சனை அவர்களுக்கு பாதகம் என்று மட்டும் வந்தால் 2 பேர் பிரச்சனை. அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று மற்றவர்களை திசைதிருப்புவது… தி…. புத்தி இவ்வாறுதான் வேலை செய்யும்…

 12. ethanai saithavar oruvar avarthan asam athanai vittu innum oruvar meethu bali sumtthuvthu nalle velaya..? satru sinthiunkkal………

 13. Amjath Mohamed. says:

  இதிலே ஒன்றுமட்டும் விளங்குகிறது,
  வரலாற்றில் அநேகமாக முதன்முறையாக இருக்கலாம் என நம்புகிறேன்.
  “ஒரு எதிர்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம்” நடாத்தியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: