Advertisements

அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு

-இன்போ விசேட செய்தியாளர்-

காத்தான்குடி டீன் வீதியில் கடற்கரையோரமாக அமையப்பெற்றுள்ள MSM. அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின்  நினைவாலயத்தில் அவரது  87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரால்  அன்னதான நிகழ்வு கடந்த சில நாட்களாக  மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த நிகழ்வானது  இசை முழக்கங்களுடன் பாரிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் ஆண், பெண் வித்தியாசமின்றி சகலரும் கலந்து கொண்டிருப்பத்துடன் ஒருசில வெளியூர் முகங்களையும் காணமுடிகின்றது.

இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு முக்கிய உலமாவை காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறினார்,

“இது முற்று முழுக்க இஸ்லாத்திற்கு மாறுபட்ட வகையிலான ஏனைய மத உற்சவங்களை ஒத்தது. இங்கு அன்னதானம் என்ற பெயரில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் முற்றிலும் இஸ்லாத்திற்கு மாறுபட்ட நூதன செயல்கள் ஆகும். அனைத்து நூதன செயல்களும் வழிகேடுகளாகும், அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச்செல்லும் என்று தெரிவித்தார் .

மேலும் அவர் கூறுகையில், இங்கு வழங்கப்படுகின்ற அன்னதானமானது இஸ்லாத்தில் எங்குமில்லாத ஒரு வழிமுறை என்பதோடு, இந்த வழிகேடுகளில் இருந்து அல்லாஹ் நமது மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றும் எமக்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு தொடர்பாக காத்தான்குடி இன்போ தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரை தொடர்பு கொள்வதற்கு செய்த முயற்சிகள் இந்த செய்தி பதிவேற்றும்வரை பலனளிக்கவில்லை என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Advertisements

Comments

 1. ABDUL KAYOOM says:

  யா அல்லாஹ் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும் ஈமானை பறிகொடுத்து சைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றி உனக்கு இணை வைத்து நீ மன்னிக்கவே முடியாது என்ற பாவத்தை இலகுவாக….செய்கிறார்கள் நீதான் இவர்களுக்கு நல் வழி கர்ட்ட வேண்டும் ….

 2. they will do and indi…n r… and mo…. with them. we know that….

 3. ABC Group90 says:

  சோடணையிலும் (Decorations) அன்னதானத்திலும் .. …. மௌலவி அவர்களின் அஜ்மீர் கந்தூரியை மிஞ்சிவிட்டனர்!

  ஹாஜாவின் நிலையும் பயில்வானின் நிலையும் என்ன என்பது ஆடுவோருக்கும், பாடுவோருக்கும், உண்டு மகிழ்வோருக்கும் எங்கே புரியப்போகின்றது!!!

 4. அஸ்ஸலாமு அலைக்கும்….

  அல்குர்ஆன் கூறுகின்றது …

  اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ( الحديد 20)

  “அறிந்துகொள்ளுங்கள்!!. இவ்வுலக வாழ்க்கையானது வீண் விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர – அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை. எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ. (இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்) மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமையான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.” (ஸூரா அல்ஹதீத் : 20)

  நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச் சென்றிருக்கின்றார்கள். அவர்களது வழி முறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம். நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள் …

  “மக்களே நான் உங்களைத் தெட்டத் தெளிவானதொரு பாதையிலே விட்டுச் செல்கின்றேன் அதன் இருள் சூழ்ந்த இரவுப்பகுதி கூட பட்டப்பகலைப் போல் பிரகாசமிக்கதாய் விளங்குமளவுக்கு அவ்வழி மிகத் தெளிவான வழியாகும் . தன்னைத் தானே அழிவின் பக்கம் போட்டுக் கொள்ளும் துரதிஷ்டமிக்கவனைத் தவிர வேறு எவரும் இவ்வழியை விட்டும் தடம் புரண்டு செல்ல மாட்டார்கள்.” ( இப்னு மாஜா 43 )

  மேலும் கூறியுள்ளார்கள் “நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் பலமாகப் பற்றிப் பிடித்திரும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறி விட மாட்டீர்கள், அவைதான் ஒன்று அல்குர்ஆன் அடுத்தது எனது வழி முறையாகும்’என்றார்கள்.” (முஸ்லிம் 2137 )

  நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள். பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள். பின்பு இதோ இருக்கும் நேர் கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழி முறையாகும் . அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

  وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (153 انعام)

  “நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும், எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும். நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான்.” ( அல் அன்ஆம் 153 )

  எனவே மேற்படி நபிமொழிகளிலிருந்து நபியவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழியிலேயே நடக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருப்பதுடன் அதைப் புறக்கணித்து வேறு வழியில் நடக்க முற்படும் போது நிச்சயமாக அது வழிகேட்டின் பக்கமே இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்திருப்பதை அறிய முடிகின்றது.

  நபி வழி தான் நம் வழி எனும் கொள்கையை ஏற்றவர்களாயிருந்தால் நிச்சயம் இவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள். இதற்கு மாற்றமாக குரு வழியே குடியானவன்; வழி ஆசான் வழியே அடியேன் வழி எனும் கொள்கையில் வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் பயனளிக்காது. அல்லாஹ் நாடினால் – அவனாக இவர்களுக்கு நேர் வழி காட்டினால்த் தான் உண்டு . அதற்காகவும் நாம் பிரார்த்திப்போம் .

  “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”

  அல்லாஹ் போதுமானவன்.
  உங்களுடன்…
  பௌமி-கட்டார்

 5. abuaasiya. says:

  அஸ்ஸலாமு அலைக்கும்.
  காத்தான்குடி;
  சுமார் 65 க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள்,ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான பல மார்க்கக் கல்லூரிகள்,அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தனி முஸ்லிம்களை மாத்திரமே சனத்தொகையாகக் கொண்ட பிரதேசம்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட மார்க்கத்தை படித்த உலமாக்கள் என மார்க்க ரீதியான பல சிறப்பம்சங்களைக் கொண்டது நமது ஊர்.

  ஆனால் இதில் வருந்த்தத்தக்க விடயம் என்னெவெனில்,
  மார்க்கத்தின் பெயரால் நடக்கின்ற அனைத்து அனாச்சாரங்களும் நமது ஊரிலேயே நடப்பதும்,அதுவும் குறிப்பாக நமது சமூகத்தின் காவலர்களான உலமாக்களின் முன்னிலையிலேயே நடந்தேறுவதும்தான்.

  குர்ஆனிய அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒருவர் தனது தொழுகையை,இன்னபிற அமல்களை நபிகளாரின் வழிகாட்டுதல்களின் படி அமைத்துக்கொள்ள வ்ரும்புகிறார்.
  அதனால் அவர் பாரம்பரியமாகச் செய்து வந்த வணக்க முறைகளில் சிலமாற்றங்களை செய்யவேண்டி ஏற்படுகிறது.இந்த சந்தர்ப்பங்களில் கூட இருக்கின்ற நமது சகோதரர்கள் அவரைப்பார்த்து ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர்.

  “இது நேற்று வந்த உங்களுக்குதான் தெரிந்ததா?
  நமதூரிலுள்ள மூத்த உலமாக்களுக்கு தெரியாமல் போய்விட்டதா?அவர்கள் படிக்காத மார்க்கத்தையா நீங்கள் படித்து விட்டீர்கள்?”என்று பலவாறாக அந்தக் கேள்விகள் நீளுகின்றன.
  ஆனால் அந்த மூத்த உலமாக்கள் நமது ஊரில் இருந்ததினால் நமதூருக்கு கிடைத்த பலன்தான் என்ன?
  வேரிலேயே கிள்ளி எறிய வேண்டிய தெளிவான இணைவைப்புக்களை தாங்களே முன்னின்று சமூகத்தில் அரங்கேற்றியவர்கள் இந்த மூத்த உலமாக்கள்(?)தான்.என்பதை நமது சகோதரர்கள் ஏனோ மறந்துவிடுகிறார்கள்.
  ஆனால் நமதூரில் இணைவைப்பிலேயே மரணித்துப் போன எத்தனையோ மக்களின் மறுமை வாழ்க்கைக்கு சமூகத்தின் வழிகாட்டிகள் என்ற வகையில் தேவையான சந்தர்ப்பத்தில் அகீதாவை தெளிவு படுத்தாத உலமாக்களும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

  “இந்த நிகழ்வானது இசை முழக்கங்களுடன் பாரிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

  இந்த நிகழ்வில் ஆண், பெண் வித்தியாசமின்றி சகலரும் கலந்து கொண்டிருப்பத்துடன் ஒருசில வெளியூர் முகங்களையும் காணமுடிகின்றது.”

  யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமூகத்தையே சார்ந்த்தவராவார்.(அல் ஹதீஸ்).

  இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு மார்க்கத்தை தெளிவு படுத்துவதற்காக களத்தை ஏற்படுத்தித் தருகின்ற காத்தான்குடி இன்போ இணையத்தள நிருவாகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
  அபூஆசியா,
  காத்தான்குடி.
  abuaasiya2011 @gmail.com

 6. Attn ABC Group90! It is kanthoori. this is not kanthoori. don’t match both. pls understand what is the kanthoori. who is the awliya

  • ABC Group90 says:

   Kanthoori, Moulidu. Birthday Pary, Mixed Party(ladies and gents) everything coming frm personal mankind worship! All things are innovation. innovation bring to hell fire. Even you are celebrating in different names those are out of from the Quran and Sunnah.

 7. aburizvi says:

  இந்த தரிக்கா வாதிகளுக்குள் அன்மைல் பயல்வா.. …… கணவில்
  வந்து சொல்வதைத்தான் நமக்குள் நிறைவேற்ற வேண்டும்
  என்கின்ற ஒரு சிலரும் அப்படி இல்லை நாம் எடுக்கும் முடிவைத்தான்
  இனி நிறைவேற்றுவது என்று சொல்லும் ஒரு சிலருக்கும் இடை இல்
  பாரிய சண்டை நடந்தது இதன் பிறகு அது இரண்டு கூட்டமாக பிரிந்தது
  அதில் ஒரு கூட்டம் அன்மைல் நடந்த கந்துரி கூத்துக்கு வரவில்லை
  என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். எது எப்படியோ இவ்விசயத்தில்
  பயல்…., ரவு…. ஒன்றுதான்

 8. aburizvi says:

  Hello! kky அண்ணதானம், கந்தூரி அப்துல்லா பயல்வான் (ரஹ்),
  அஜ்மீர் ஹாஜா (ரஹ்) இரண்டும் ஒன்றுதானே இதில் என்ன
  சந்தேகம் ?

 9. K.T.R says:

  நீங்க எல்லாம் இப்படி comment கொடுத்தா அவங்க திருந்துவங்களா

 10. fazly says:

  ewalavu vilakkuhalai kondu alangarithalum ungal ullangalil irukkum irulai ahatra mudiyathenpathu thelivana vidayam

 11. RIFATH says:

  மீண்டும் இவர்கள் இக் கந்தூரியை நடத்துவதற்கான தைரியத்தைக் கொடுத்தது நமது பிரதேச அரசியல்வாதிகள்தான்…. அவர்களைத்தான் குற்றம்சாட்ட வேண்டும்…. தமது வாக்குக்காக வசதிக்காக எதையும் செய்வார்கள் அவர்கள…

 12. rikaz says:

  எமது பிரத்தனைகள் இவர்களின் ஹிதாயத்திற்கு வழி வகுக்கட்டும்

 13. Mazaa says:

  (நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்! (அல்குர்ஆன் 26:3)

  நபியவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களை பார்த்து, அவர்களுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டுமே என மிகவும் கவலைப் பட்டிருக்கிறார்கள்.

  நம்மில் எத்தனைபேர், நம்முடன் ஒன்றாக இருந்து – திசைமாறிச் செல்லும் இந்த சகோதரர்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டு அவர்களது நேர்வழி மீட்சிக்காக பிரார்த்திக்கின்றோம்..?

 14. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறியும் இது போன்ற நிகழ்வுகள் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. இதனை நடத்துபவர்கள் பணத்தையும் சாப்பாட்டையும் காட்டி ஏழை மக்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு அல்லாஹ்வை ஈமான் கொண்டு நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்களாக வாழ முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றேன். நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டு விஞ்ஞான யுகம் எனவே உங்களது ………………… கொள்கைகள் மூலம் மக்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது ஏன் உங்கள் பிள்ளைகளைக் கூட. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் மாத்திரமே மண்ணோடு மண்ணாகி அழுகி உழுத்துப்போன பயில்வானின் சிந்தனைகள் அல்ல. உங்களுக்கு சிந்தித்து செயல்படும் அறிவு உள்ளது என்று நான் நம்புகிறேன்.

 15. rasmi says:

  why u publish like this article? this also support them. please do not publish again.

 16. SAALOOM says:

  rasmi,good comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: