Advertisements

கலாநிதி அஹ்மத் அஷ்ரப் இணைப் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றார்

– அபூ றப்தான் –

சவூதி அரேபியா, அப்ஹாவில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகம், உதவிப் பேராசிரியர் கலாநிதி U. L. அஹ்மத் அஷ்ரப் அவர்களுக்கு ‘இணைப் பேராசிரியர்’ (Associate Professor) பதவியை வழங்கியுள்ளது.

எகிப்தின் அல்-அஸ்ஹர், அல்-ப(கு)ய்யூம் பல்கலைக்கழகங்களின் வருடாந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்த கலாநிதி அஷ்ரப் அவர்களின் 4 ஆய்வுக் கட்டுரைகள் இப்பதவியைவழங்குவதில் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

பின்பு, இவை ஷரீஆ பீட அவை மற்றும் ஹதீஸ் திணைக்களம், பல்கலைக்கழகக் கவுன்ஸில் ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றன. பின்னர் அகடமி கவுன்ஸில் மேற்படி ஆய்வுகளை சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களுக்கு இரகசிய பரிசீலனைக்கு அனுப்பியது.

அப்பேராசிரியர்கள், ஆய்வுகளைப் பரிசீலித்து தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்பு, மன்னர் காலித் பல்கலைக்கழகம் இணைப்பேராசிரியர் தரத்தை வழங்கியுள்ளது.

கலாநிதி அஷ்ரப் அவர்கள், 1962 இல் காத்தான்குடியில் பிறந்தவர். மாப்பிள்ளை ஹாஜியார் என அழைக்கப்படும் மர்ஹும் உமர்லெப்பை ஹாஜியார் தம்பதிகளின் மகனாவார். 2000 ஆம் ஆண்டு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர், காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம், மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியை கற்றபின் அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அரபுக் கல்லூரியில் தனது மார்க்கக் கல்வியை மேற்கொண்டு, உயர் கல்விக்காக எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்று ஹதீஸ் துறையில் முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். ஹதீஸ் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொழும்பு தாருல் ஹதீஸ், காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரி ஆகியவற்றின் தலைவராக இருந்து, தனது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

முன்னதாக கலாந்தி அஷ்ரப் அவர்கள் இதே பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Comments

 1. Dr M L Najimudeen says:

  Well done. Congratulations.

 2. mmsa says:

  the people who oppose him must understand his capacity and try to learn how to respect such a knowledgeable scholar, we can be proud about having such a great person in our soil

 3. Alhamthulillah

  Allah shall give him all goodneds and bless our people with his services

  Ali Akbar

 4. Alhamthulillah, Take care to our kattankudy dawa field.

 5. adiyaan says:

  Al Hamthulillah, Masha Allah

 6. அல்ஹம்துலில்லாஹ்

  கலாநிதி அஷ்ரப் அவர்களுக்கு எமது இணையச் சமூகமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

  காத்தான்குடி இணையச் சமூகம் (KWC)

 7. Mohammed Hiraz says:

  மேன்மை அடைந்தோறை வாழ்த்துகிறோம் கலாநிதி அஸ்ரப் தன் வாழ் நாளில் தமிழ் கூறும் நல் உலகிட்கு தன் திறமைகளை வைத்து முழுமையான ஸஹீஹான ஹதீதுகளின் தொகுப்பின் மொழி பெயர்பொன்றை வெளி இடுவார் என அதிக தமிழ் பேசும் முஸ்லிம்கள் எதிர்பார்கின்றனர்!!! ஸிஹாகுஸ்ஸித்தா,முஅத்தா,பைஹக்கி இன்னும் பல ஹதீது கிரந்தங்களில் உள்ள முழுமையான ஸஹீஹான ஹதீதுகளின் தொகுப்பை மொழிபெயர்பாக வெளியிட கலாநிதி அஸ்ரப் நடவடிக்கை எடுத்தால் மிக பெரிய உதவியாக இருகும்!!!

 8. Muzzammil says:

  எமது ஊருக்கு கடைத்த வரப்பிரசாதம் இது.
  அனைத்து காத்த நகர் மக்கள் சார்பாகவும் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  எல்லாம் வல்ல அழ்ழாஹ் மென்மேலும் தங்களுக்கு nருள்புரிவானாக!

 9. Under Graduade Association says:

  Congratulation.

 10. Under Graduade Association says:

  எமது ஊருக்கு கடைத்த வரப்பிரசாதம் இது.
  அனைத்து காத்த நகர் மக்கள் சார்பாகவும் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  எல்லாம் வல்ல அழ்ழாஹ் மென்மேலும் தங்களுக்கு அருள்புரிவானாக!

 11. Mujahid says:

  Mohammed Hiraz :

  மேன்மை அடைந்தோறை வாழ்த்துகிறோம் கலாநிதி அஸ்ரப் தன் வாழ் நாளில் தமிழ் கூறும் நல் உலகிட்கு தன் திறமைகளை வைத்து முழுமையான ஸஹீஹான ஹதீதுகளின் தொகுப்பின் மொழி பெயர்பொன்றை வெளி இடுவார் என அதிக தமிழ் பேசும் முஸ்லிம்கள் எதிர்பார்கின்றனர்!!! ஸிஹாகுஸ்ஸித்தா,முஅத்தா,பைஹக்கி இன்னும் பல ஹதீது கிரந்தங்களில் உள்ள முழுமையான ஸஹீஹான ஹதீதுகளின் தொகுப்பை மொழிபெயர்பாக வெளியிட கலாநிதி அஸ்ரப் நடவடிக்கை எடுத்தால் மிக பெரிய உதவியாக இருகும்!!!

 12. Saheed Ajmal says:

  Al Hamthulillah, Masha Allah

 13. sabry acm says:

  Heartiest Wishes

 14. Saabith says:

  எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
  அல்லாஹ் மேலும் மேலும் உங்கள் பதவிகளை உயர்த்த உதவி புரிவானாக

 15. Shukry says:

  Congratulation…………………….

 16. Aliyar says:

  அல்ஹம்துலில்லாஹ்!! அல்ஹம்துலில்லாஹ்!! நம்முட ஊருக்கென்ன? நம்முட நாட்டுக்கே கிடைச்ச அரிய பொக்கிசம் தான் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவங்க என்டு நான் சொல்லறதுல பெருமபடுறன் மன. அல்ஹம்துலில்லாஹ்!!

  அல்லாஹ் உங்களுக்குத் தந்த அறிவ மிக மிக நல்ல விசயத்துகு பயன்படுத்துறீங்க…. அதனால பயன்பெறுபவகளும் அதிகமாக இரிக்காக.. நம்முட ஊரு தவிர…???

  உலமா என்டால் ‘அறிஞன்’ என்டு அர்த்தம். நம்முட நாட்டுல நம்மட ஊருல இத தெரிஞ்சவக எத்தன பேரு என்டு எனக்கு தெரியாது…. ஆனா நீங்க ஒரு முழு உலமா என்டு மட்டும் விளங்குது ….. அல்ஹம்துலில்லாஹ்…..

  மேல நம்ம ஹிராஸூ தம்பி சொன்ன மாதிரி உங்கட பூரண அறிவ வச்சி தமிழ் மொழியில ஸஹீஹான கதீஸ்கள ஒரு நூல் வடிவமா வெளியிட்டீங்கன்டா அது எல்லாருக்கும் மிக பயனுள்ளதாக இரிக்கும்.

  நம்முட ஊரு மௌலவிமாரு?? ஏன் நமமுட நாட்டுல இரிக்கிர அத்துன மெலளவிமாரும் உண்மையான இஸ்லாத்த விளங்கி வச்சிரிக்காளா எங்குறது எனக்கென்டா சந்தேகமாத்தான் இரிக்கி மன…

  இப்பவே புஹாரி ஒதுறம் என்ட பெயருல தல சிறந்த உலமாக்கள் என்டு நம்பியிருந்த இப்புடியன உலமாக்கள் செய்யற வேலைகளப் பாத்தா யார நம்பனும்? யார நம்பப்படாது.. என்டு பாமர மக்களாகிய எங்களுக்கு ரொம்பவே குழப்பமாத்தான் இரிக்கி மன……

  பெருமதிப்பக்குரிய தம்பி கலாநிதி அஸ்ரப் அவங்களே!! உங்கள விட வயசுல நான் பெரியவன் என்டாலும் உங்கட அறிவல உங்கள விட பல கோடி மடங்கு நான் சிறியவன். நான் உங்களுக்கு அறிவுர சொல்லுறன் என்டு தயவு செஞ்சி நினைச்சிக்க வேனாம் … உங்கட பூரணமான அறிவ பூரணமாப் பயன்படுத்தி நம்முட ஊருல இரிக்கிற உலமாக்க்களையும்?? சரி… நம்முட நாட்டுல இரிக்கிற உலமாக்களையும் சரி…. ஏன்? அவர்கள நம்பி நல்லது என்டு நினைச்சி வழிகேட்டின் பக்கம் போய்கொண்டிரிக்கிற என்ன மாதிரி அப்பாவி மக்களையும் சரி சுமூகமான முறையில நல்ல வழிக்கு கொண்டுவரவேண்டிய பங்கு உங்களுக்கும் இரிக்கி ….

  நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கும் என்டு நினைக்கன்… அண்மக் காலங்கள்ளல நம்முட ஊருல மார்க்கத்தின் பெயரால நடந்த பல கசப்பான சம்பவங்கள் உங்களுக்குத் தெரியும் ..

  அத மாதிரி இனியும் நடக்கப்போடாது… ஆனாலும் நம்முட மக்கள் திருந்தனும். அதுக்காக நீங்க உங்களாலான நடவடிக்கைகள எடுக்கனும். நல்லது செய்யிற மக்களுக்கு அல்லாஹ்ட உதவி என்டைக்கும் இரிக்கும். …

  ‘இணைப் போராசிரியர்’ என்ட பதவி உங்களுக்கு கிடைச்சதுல நான் மிகவும் சந்தோசப்படுறன் .. அல்லாஹ் மேலும் மேலும் உங்களின்ட அறிவி விருத்தி பெறச் செய்து அதன் மூலம் பல பேருக்கு ஹிதாயத்து கிடைக்கச் செய்வானாக… ஆமீன்.

  நன்றி காத்தாங்குடி இன்போ மக்காளுக்கு….

  U.M. அலியாரு மொஹிதீன்
  காத்தாங்குடி

  • rauf says:

   Mr.Aliyar. your all comments are really superb….. Keep it up.

  • Mohammed Hiraz says:

   மனிதர்களில் யாறும் பூரணத்துவமிக்க அறிஞறோ அல்லது முழுமையான அறிஞறோ கிடையாது, எல்லாறுமே எதோ ஒரு வகையில் குறை உள்ளவர்களே, முழுமையான அறிஞர் என்று மதர்களை பார்த்து கூறுவது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சிர்க்கிட்கு ஒப்பானது!!! இதைதான் சொல்லுவார்கள் மனிதர்களில் சிலர் சாதாரணமாக ஒருவார்தையை உபயோகிப்பர் ஆனால் அந்த வார்தையின் கடின பாரத்தால் அல்லாஹ்வின் சுவர்கத்தை விட்டும் வெகு தொலைவை அடைந்து விடுவர், இன்னும் சிலர் ஒரு வார்த்தையை கூறிவிடுவர் ஆனால் அந்த வார்தையின் கனத்தால் எல்லா தீங்கிலிருந்தும் விடு பட்டு சுவர்கதிட்கு மிக சமீபமாகிவிடுவர்

 17. Abdullah says:

  CONGRATULATION! ALHAMTHULILAH!!

 18. ottrumaivirumpi says:

  எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
  அல்லாஹ் மேலும் மேலும் உங்கள் பதவிகளை உயர்த்த உதவி புரிவானாக

 19. MOHAMED AKRAM says:

  Congratulations….

 20. sri boss says:

  #Congratulations#

 21. ABDUL KAYOOM says:

  எமது ஊருக்கு கடைத்த வரப்பிரசாதம் இது.
  அனைத்து காத்த நகர் மக்கள் சார்பாகவும் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  எல்லாம் வல்ல அழ்ழாஹ் மென்மேலும் தங்களுக்கு அருள்புரிவானாக!

  • hasan says:

   இவர் ஒரு இஸ்லாமிய அழைப்பாளர். நீங்கள் கொடுத்திருக்கும் வரப்பிரசாதம் என்பதனை என்னவென்று கொஞ்சம் விளக்குங்கள். மக்கள் தெளிவடைவார்கள்.

 22. shamil says:

  Congratulations…

 23. Areen says:

  Congratulation Best of luck

 24. Nirfan says:

  congratulations

 25. nawsath says:

  CONGRATULATION! ALHAMTHULILAH!!

 26. We are proud to wish for your Achievment By:SANGAM SRI LANKA SOCIAL WELFARE SOCIETY

 27. khalid msm says:

  “ALLAH IS GREAT” OUR DR. AHMED ASHRAFF PHD, HE IS A VERY POLITE AND AMICABLE RELIGIOUS professor, WHO IS A VERY FIRST PERSON OBTAINED A GREAT REWARD OF PHD AND DOCTORATE FOR A WIDE KNOWLEDGE IN THE HADEETH AND ISLAMIC SARIA. MAY ALMIGHTY ALLAH BLESS HIM ALWAYS AND SECURE HIS LIFE UNTIL THE AGE LONG AMEEN – KHALID

 28. hasan says:

  Alhamdu lillah

 29. Azeem says:

  Congratulation for your Achivement

 30. Ziaf says:

  Congratulations…

 31. محمد مفاز ابن محايالدين says:

  அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் பெரியவன்.ஏக இறைவனின் தூதர் சொன்ன பொன்வாவாக்குகளை அதிகம் தேடித் தெரிய எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாய் இருந்தவர்.அல்லாஹ் எம் அனைவரையும் போருந்திக்கொள்வானாக!!!ஆமீன்.

 32. محمد says:

  உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என்பவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை தயவு செய்து விளங்கப் படுத்த முடியுமா?

 33. Irham Segudawood says:

  Dear Mohamed, I beleive that my following reply will be suitable for your question.

  assistant professor, : Definition: An entry-level faculty position. Most colleges require a doctoral degree although some community colleges may hire master’s level graduates. An assistant professor is nobody’s assistant; instead she or he is a professor at the lowest rung of the promotion ladder. Most assistant professors do not yet have tenure

  professor: professor of the highest rank

  associate professor: An Associate Professor is the second level full-time position for college and university instructors who have a Ph.D. Unlike the entry-level full-time position with a Ph.D., called an assistant professor, Associate Professors have tenure. Associate Professors have more administrative responsibilities. They’re able to serve on boards and committees whose membership is restricted to tenured faculty. Based on their record of teaching and research, an assistant professor becomes eligible for tenure and promotion to Associate Professor after 5-6 years. Some Associate Professors retain that rank throughout their academic career; however, many become full professors.

  • محمد says:

   Thank you for your comprehensive explanation Irham. Let me also join the others here in congratulating him on his achievement. I wish he becomes a professor during his career.

 34. Masha ALLAH

 35. lafeer sarabdeen says:

  மாஸா அல்லாஹ்

 36. Moulavi Nashmel says:

  الحمد لله ،
  மேலும் உங்கள் ஆய்வுகளும் , பணிகளும் தொடர அழ்ழாஹ் அருள்பொளியட்டும் . முஸ்லிம் சமூகம் சுன்னா பற்றிய தெளிவை அறிந்து கொள்ள தொடர்ந்தும் பாடு பட அழ்ழாஹ் உங்களுக்கு பூரண சுகத்தைத் தரட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: