கல்லடி பாலத்தில் நீந்தும் பாம்பு தொடர்பில் காத்தான்குடி மீனவர்களின் கருத்து

-அபூ றப்தான்-

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக நீந்தும் உயிரினம் தொடர்பில் காத்தான்குடியைச்சேர்ந்த மீனவர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

அவர்களின் கருத்துக்களை எமது வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கின்றோம்  இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனர்.

எம்.எம்.ஆசிக்

எனக்கு மீன் பிடியில் நன்கு அனுபவமுள்ளது. இவ்வாறான ஒருவகை மீன் இனத்தை நான் கண்டதே இல்லை. இது மீன் இனம் என்று கூறமுடியாது, இது நிச்சயமாக ஒரு வகையான நீரில் வாழும் பாம்புகளே.  இந்த பாம்புகள் மம்முனி பாம்பு இனத்தை சோந்தது என  நான் கருதுகின்றேன்.

 

கே.எல்.எம்.உசனார்

கல்லடி பாலத்தில் நீந்தும் கடந்த மூன்று நாட்களாக நீந்தும் உயிரினம் நிச்சயமாக கடல் பாம்புகளல்ல, அது கடல் பாம்பு என்றால் வாவிகளில் வாழாது. நான் கடற்றொழில் 40 வருடங்கள் அனுபவமுள்ளவன், நான் அறிந்தவகையில் கடல் வாழும் பாம்பு வகைகள் வாவிகளுக்கு வராது.

 

எஸ். மன்சூர்

இது நிச்சயமாக அனர்த்தம் ஒன்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் என நான் கருதுகின்றேன். நான் சுனாமிக்கு முன்பு கண்ட அதே பாம்புகளே இப்போதும் வந்துள்ளன. இது நிச்சயமாக மீன் இனமல்ல. விலாங்கு மீன் அல்லது காரல் மீன் என்றெல்லாம் இதை கூறமுடியாது, அகவே இது பாம்பேதான்.

Comments

  1. THANUJAN says:

    AM AVAI PAMPUKAL THAN PONA SUNAMIKKU MUNNARUM AVASI VANTHA ATHANAI MAKKAL PERUTHU PADUTHTHA VILLAI

  2. பாம்புக்காதயா ?

Leave a comment